2000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2181 கோடி மதிப்பில் பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்தை தீவு மைதானத்தில் வைத்து அவர் தொடங்கினார். இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ். பி. வேலுமணி, ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தில் முதலாவதாக சென்னை மாநகராட்சி சார்பில் 1295 கோடி ரூபாயும், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு ரூபாய் 325 கோடியும்,நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் 36 கோடி ரூபாயில் திட்டங்களை செயல்படுத்தயுள்ளார். மேலும் கூவம் கரையோரம் 4 லட்சம் மதிப்பிற்கு தாவரங்கள் நடும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். அதுமட்டுமில்லாமல் சென்னை பேரூராட்சி இயக்கத்திற்கு 24 கோடி ரூபாய் ஒதுக்கினார். இப்படி பல திட்டங்களை செயல்படுத்துவதற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.