Categories
உலக செய்திகள்

உத்தரவாதம் கிடையாது… ஜூன் 21 லிருந்து இவை ரத்து… போரிஸ் ஜான்சன் அறிவிப்பு…!!

பிரிட்டன் பிரதமர்  போரிஸ் ஜான்சன் ஜூன் 21ம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படும் என்றும் அதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று அறிவித்துள்ளார். 

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெற்கு லண்டனில் இருக்கும் பள்ளி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது விருந்து மற்றும் பொழுதுபோக்கு போன்ற இடங்களை திறப்பதற்காக தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை உபயோகிப்பதற்கான அரசாங்கத்தின் மறுஆய்விற்கான திட்டங்களை அறிவித்துள்ளார்.

மேலும் இதற்கான ஆய்வு மைக்கேல் கோவ் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மிக விரைவாக நாங்கள் முடிவு எடுப்பதாக சிலர் கூறுகிறார்கள். மேலும் சிலர் நாங்கள் மிகவும் மெதுவாக செயல்படுவதாகவும் கூறுகிறார்கள். சமநிலை சரியாக இருப்பதாக  நான் நம்புகிறேன்.

மேலும் இந்த இடைவெளியானது மாற்றங்களினால் ஏற்படும் தாக்கத்தை புரிந்து கொள்வதற்கு நேரத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் ஜூன் 21ம் தேதியிலிருந்து விதிமுறைகள் ரத்து செய்யப்படும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அதற்காக இதற்கு உத்தரவாதம் வழங்க முடியாது என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |