Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

ஏமாற்றமடைந்த ரசிகர்கள்… அஜித்தின் “துப்பாக்கிச்சூடு”… காத்திருப்புக்கு பலன் கிடைக்காததால் கவலை…!

பிரபல முன்னணி நடிகராக திகழும் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு வந்த போது அவருடன் செல்ஃபி எடுக்க நினைத்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழும் அஜீத் நடிப்பு மட்டுமின்றி பல்வேறு திறமைகள் கொண்டுள்ளார். அவர் பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்கு அடுத்தபடியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை ரைஃபிள் கிளம்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியும் அவர் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் அஜித் வாடகை கார் ஒன்றின் மூலம் பழைய காவல் ஆணையரக அலுவலகத்திற்குள் இருக்கும் ரைஃபிள் கிளம்பிற்கு செல்வதற்கு பதிலாக புதிய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று விட்டார்.

அங்கு இவரை கண்ட பொதுமக்கள் மற்றும் புகார் அளிக்க வந்தவர்கள் என அனைவரும் அஜித் உடன் செல்பி எடுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் கடந்த 23 தேதி வழக்கம் போல் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வதற்காக பழைய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வாடகை கார் மூலம் சென்றார்.

சுமார் 3 மணி நேரம் தனது பயிற்சியை முடித்து வெளியே வந்த அஜித் தன் ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு காரில் ஏறி சென்றார்.ஆனால் நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்து வீடு திரும்பினர்.

Categories

Tech |