காமெடி நடிகரான வடிவேலு வருத்தப்பட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது . அதற்கு ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்தனர். தற்போது பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தான் தயாரிக்கும் படத்தில் நீங்கள் நடிங்கள் என்று வாய்ப்பு கொடுத்துள்ளார். அது யாரென்றால் மீராமிதுன். மிஸ்டர் இந்தியா 2016 போட்டியின் வெற்றியாளர்கள். இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 18 போட்டி அவருடன் போட்டியிட்டு வென்றவ. ர் 2017 ஆம் ஆண்டு கணேஷ் இயக்கிய தமிழ் திரைப்படமான 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தவர்.
பிக்பாஸ் மூலம் மக்களுக்கு தெரிய வந்த இவர் பிரபல நடிகர்களை பற்றி அவதூறாக பேசி பிரபலமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக நடித்து வரும் வடிவேலு தற்போது சில பிரச்சினைகளின் காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருப்பதாகவும், அவர் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். தனக்கு நடிக்க தெம்பு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார் .அவர் வீடியோவை பார்த்து அனைவரும் வருத்தம் தெரிவித்தனர்.
இதனிடையில் மீரா மிதுன் அந்த வீடியோவை பார்த்து வருத்தம் அடைந்ததாகவும், வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்று வருத்தப்பட்டு இருக்கீங்க. வெற்றிகரமான ஒரு மனிதரை எப்போதும் மற்றும் மோசடி செய்தும் தான் நிறுத்துவார்கள். யாரும் யாரையும் ஒதுக்க கூடாது என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடம். உங்களது தெனாலிராமன் படத்துக்கு நான் பெரிய ரசிகை அந்த படத்தில் நீங்கள் கூறியுள்ள அனைத்தும் நன்றாக இருக்கும். நீங்கள் எப்பவும் கலங்கக் கூடாது நான் தற்போது சொந்தமாக படம் தயாரிக்கப் போகிறேன். அதில் நடிக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நடியுங்கள். உங்களுடன் நான் நடிப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறினார்.