சீட்டுக்கும் நோட்டுக்கும் தான் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளதாகவும், இட ஒதுக்கீடு கொள்கை என்பது வன்னியர்களை ஏமாற்றம் செயல் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்னிய சமுதாயத்திற்காக போராடி வருவதாகக் கூறிக் கொண்ட ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தற்போது போராட்டத்தை கைவிட்டு மௌனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார் ? தன்னிடம் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்கள் வன்னியர் அறக்கட்டளைக்கு மாற வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து ராமதாஸ் தற்போது இடஒதுக்கீடு போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும், வன்னிய சமுதாய மக்களின் சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் உள் ஒதுக்கீடு கோரிக்கை வசிங்க, உள் ஒதுக்கீட்டை ஏற்கிறோம் என்று சொன்னீங்க… உள் ஒதுக்கீடு 16%ஆ… 15%ஆ ஏன் தெளிவுபடுத்த ? பாமக உள் ஒதுக்கீட்டை பேராமாக வைத்துள்ளது. அதிமுக – பாமக கூட்டு சேர்ந்து வன்னிய மக்களை ஏமாற்றி, வஞ்சகம் செய்து, இந்த தேர்தலில் அறுவடை செய்வதற்கு முயற்சிக்கிறார்கள். அதை ஒரு போதும் வன்னியர் மக்கள் நம்ப மாட்டார்கள் . இது தேர்தலுக்கான அரசியல் நாடகம் என்பதை நன்கு உணர்ந்து இருக்கின்றார்கள் என வேல்முருகன் குற்றம் சாட்டினார்.