Categories
சினிமா தமிழ் சினிமா

பாட்டு பாடி அசத்திய பிக்பாஸ் ஜூலி… பாராட்டிய ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் ஜூலி பாடல் பாடிய வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு பலரது கவனத்தை ஈர்த்த இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் அந்த போட்டியில் ஒரு சில சர்ச்சைகளால் ஜூலிக்கு ஆ தரவுகளோடு எதிர்ப்புகளும் கிளம்பியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக மாறினார் . ஒரு சில படங்களில் நடித்து திரைத்துறையிலும் கால் பதித்தார்.

தற்போது இவர் நடிப்பில் ‘பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்’ என்ற படம் தயாராகியுள்ளது . மேலும் நடிகை ஜூலி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்ற ‘நினைத்து நினைத்து பார்த்தால்’ பாடலை பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் . இவரின் இந்த புதிய முயற்சியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் .

Categories

Tech |