மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படும் என தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வகையில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதிலும், நீட் தேர்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தற்போது வரை பல உயிரிழப்புகளும் அதனால் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசு அதற்கு கருணை காட்டவில்லை. மருத்துவ படிப்பு படிப்பதற்கு வசதி இல்லாத மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இதற்கு மத்தியில் தமிழக அரசு மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்புக்கான செலவுகள் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்புக்கான நீட் கட்டணம் ரூ.2, 750-ல் இருந்து ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.3,750-இலிருந்து கட்டணம் ரூ.5,015 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படும் என தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. மாணவர்கள் விண்ணப்பங்களை nbe.edu.in சென்ற இணையத்தில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி மார்ச் 15 ஆகும்.