Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வருடங்களாக குழந்தை இல்லை…. மனைவியின் வீட்டிற்கே சென்று…. கணவன் செய்த கொடூரம்…!!

சென்னையில் வசிக்கும் தம்பதிகள் பன்னீர்செல்வம்-  கீர்த்தனா. பன்னேர்செல்வம் அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து திருமணமான நான்கு ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத தம்பதிகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது. இந்த சண்டையில் கோபித்துக்கொண்டு கீர்த்தனா தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவருடைய கணவர் கீர்த்தனாவின் வீட்டிற்கு சென்ற போது இருவரும் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் கோபமடைந்த பன்னீர்செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி விழுந்த கீர்த்தனாவை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் கீர்த்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் பன்னீர்செல்வத்தை கைதுசெய்தனர். மேலும் கீர்த்தனாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆன நிலையில் கொலை செய்யப்பட்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |