கொரோனா ஒழிக்க இந்தியா உலகிற்கு பெரிதும் உதவி வருவதாக பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு பல நாடுகள் பெருமளவில் பாதிப்படைந்தன. இந்நிலையில் இந்தியா உலகில் பல நாடுகளுக்கு உதவி வழங்கி வந்துள்ளது. இதனைப் பற்றி உலக சுகாதார அமைப்பு மிகவும் பாராட்டியுள்ளது. இதற்காக தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பூசியை உலகின் பல நாடுகளுக்கு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியும் கூறினார் .
இதனை கெப்ரேயஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தடுப்பூசியை உலகிற்கு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் COVAX தொடர்பான பணிகளில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் COVID -19 தடுப்பூசியை அளித்து கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவியவர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.நாட்டின் பிற பகுதி மக்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக விளங்குகிறார் என்ற தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ்-யை கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி வழங்கப்பட்டு வந்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த இரண்டு வகையான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸிங் மற்றும் கோவிஷீல்ட் . பாரத பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கோவாக்ஸிங் தடுப்பூசியும் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசியை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனேகா உருவாக்கியது. இந்தியாவில் இதனை சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. கரோனா வைரஸ் போன்ற தொற்று நோய் பரவலை தடுக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியா பல நாடுகள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளை மறந்து இந்த கடினமான சூழலில் அனைவருக்கும் உதவி செய்தது. மேலும் சீனா உத்தரவின் பெயரில் எல்லைப் பிரச்சினையை தூண்டி நேபாளத்திற்கும் புதுடெல்லி தடுப்பூசியை வழங்கி கொரானா வைரஸை கட்டுப்படுத்த உதவியது. விவசாயிகள் போராட்டம் குறித்த ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள கனாடாவிற்கும் இந்திய அரசு உதவி செய்து பெருந்தன்மையுடன் நோய் பரவுதலை கட்டுப்படுத்தியுள்ளது என உலக சுகாதார துறை நிறுவனம் தெரிவித்துள்ளது .