Categories
மாநில செய்திகள்

“6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை”… கணினி பொறியியல் பாடம் அறிமுகம்… வெளியான அறிவிப்பு..!!

சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

2020-21ம் ஆண்டில் மாநில பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.11,943.85 கோடி செலவிடப்பட்டுள்ளது.

சத்துணவுத் திட்டத்திற்கு 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.1953.98 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசின் கடன் சுமை தற்போது 4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில் அடுத்த ஓராண்டில் ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

அத்திக்கடவு – அவிநாசி வெள்ளக்கால்வாய் திட்டம் இந்தாண்டு டிசம்பரில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட மொத்த உள்ளாட்சி அமைப்பு மானியத் தொகை, 2020-21ம் ஆண்டில் 5,344 கோடி ரூபாயாக இருந்தது. இது 2021-22ம் ஆண்டில் 3,979 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.3,548 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நடப்பு நிதியாண்டில் அதிகரித்திருக்கும் நிதிப் பற்றாக்குறை தவிர்க்கமுடியாதது.

கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கான செலவினத்தை தொடர்ந்து மத்திய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம். என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |