நடிகர் வடிவேலு சமீபத்தில் வாட்ஸ்அப் குழு நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய போது தான் முடங்கிப்போய் இருப்பதாகவும், தெம்பு இருக்கிறது, நடிக்க ஆசை இருக்கிறது ஆனால் யாரும் வாய்ப்பு கொடுப்பது இல்லை. இது எவ்வ்வளவு பெரிய ரணம் தெரியுமா? என்று நடிகர் வடிவேலு கண்ணீர் மல்க தெரிவித்தார். இதைப் பார்த்த அனைவரும் கண் கலங்கினர். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் அனைவரும் நடிகர் வடிவேலுக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று கவலை அடைந்து வந்தனர். இந்நிலையில் அவருக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.
மெட்டி ஒலி சீரியல் புகழ் திருமுருகன் இயக்கிய எம்மகன் படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதேபோல அந்த படத்தில் வடிவேலு அசத்தி இருப்பார். அந்த படத்தை மறக்க முடியாது. அந்த திருமுருகன் தான் தற்போது ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 40 படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகின்றது.