Categories
லைப் ஸ்டைல்

பெற்றோர்களே உஷார்… உங்க குழந்தைக்கு இந்த அறிகுறி இருக்கா?… அப்போ இந்த நோய் கட்டாயம் வரும்…!!!

குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆரம்ப கால அறிகுறிகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. அதில் குழந்தைகளும் அடங்கியுள்ளனர். உலக அளவில் ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்று நோயின் அறிகுறிகளை ஆரம்பகாலத்தில் கண்டறிவது மிகவும் நல்லது. இருந்தாலும் அதனை கண்டறிவது மிகவும் கடினம். அவ்வாறு குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

குழந்தைகளுக்கு எலும்புகளில் ஏற்படும் வலி, மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை நாம் எளிதாக எடுத்துக் கொள்வது மிகவும் தவறு. அதனை நாம் அக்கறையுடன் கவனிக்க வேண்டும். குழந்தைகள் நடப்பதில் தடுமாற்றம்,பேசும் போது நாக்கு குளறுதல் போன்ற பிரச்சனைகள் வந்தால் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இரண்டு வாரங்களுக்கு மேலாக காலை நேரத்தில் வாந்தி மற்றும் தலை வலி தொடர்ந்து இருந்தால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இது புற்று நோய்க்கான முதல் அறிகுறி.

மேலும் தோற்றம் வெளிரி போதல், தோளில் ஊதா புள்ளிகள் ஏற்படுதல், உடல்முழுவதும் நிணநீர் பரவுதல், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத வயிற்றுப் போக்கு ஆகியவை மிக விரைவில் பரவ கூடியதாக இருக்கலாம். வரட்டு இருமல், மூச்சுத்திணறல் மற்றும் பேசுவதில் தடை போன்றவை புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறி. ஈறுகளில் ஏற்படும் வீக்கம், மூச்சுத் திணறுதல், விழுங்குவதில் சிரமம், மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் போன்றவை தொண்டை புற்று நோயின் அறிகுறிகளாக இருக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சற்று கவனத்துடன் பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

Categories

Tech |