Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5000, 2000 இப்போ 25,000 கேட்கிறார்…. கல்லூரி முதல்வர் மீது குற்றச்சாட்டு…. போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்….!

பணம் கேட்டு தொல்லை கொடுப்பதாக கூறி கல்லூரி முதல்வர் மீது குற்றசாட்டு வைத்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி இயங்கி வருகிறது. கொரோன ஊரடங்கிற்கு பிறகு கல்லூரி தொடங்கப்பட்ட நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நவம்பர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர்களின் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்காக பேராசிரியர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் கல்லூரி முதல்வர் ரவி வசூலித்தார்.

இதுமட்டுமல்லாது கல்லூரியில் பணிபுரியும் சுயநிதி பாட பிரிவு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவும்  மாதம் 2,000 ரூபாயும் அவர் வசூலித்தார். தற்போது புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதாக கூறி பேராசிரியர்களிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு கல்லூரி முதல்வர் தொல்லை கொடுப்பதாக பேராசிரியர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர். அனால், இந்த புகார் குறித்து கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என 25 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள மூக்கையா தேவர் நினைவு மண்டபத்தில் அமர்ந்து கல்லூரி முதல்வரை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |