குண்டுவெடிப்பில் இறந்து போன தன் தாயிடம் “அம்மா எழுந்திரி” என்று குழந்தைகள் கூறும் உருக்கமான காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண்ணும் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தின் போது இந்தப் பெண் அவரது இரண்டு குழந்தைகளுடன் இருந்துள்ளார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இந்நிலையில் அம்மா உயிரிழந்ததை கூட அறியாத அந்த மழலை குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கும் தனது தாயிடம் “அம்மா எழுந்திரி” என்று கூறி எழுப்பும் காட்சியை அங்கு இருந்தவர் ஒருவர் கேமராவில் பதிவு செய்துள்ளார்.
அதன்பின் இந்த உருக்கமான காட்சியை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மேலும் இந்த காட்சியில் இரண்டு குழந்தைகளும் லேசான காயம் அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்புகள் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.