எத்தியோப்பியாவில் கொள்ளையடிக்க வந்த கும்பல் 800 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எத்தியோப்பியா நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் புனிதப் பேழை ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேழையை கொள்ளை இடுவதற்கு நடந்த கொடூர வன்முறையில் இதுவரை சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த இந்த கொடூர கொலைசம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எத்தியோப்பியாவில் இணையம் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை பிரதமர் அபி அகமது தடை செய்திருந்தார். அதனால் இந்த கோர சம்பவம் குறித்து வெளி உலகத்திற்கு தெரியாமல் போயுள்ளது. சம்பவத்தின் போது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. அதனைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த மக்கள் புனித பேழையை பாதுகாக்க தேவாலயத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அவர்களை கொடூரமாகவும், கண்மூடித் தனமாகவும் தாக்கி கொன்று குவித்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் பாதிரியார் ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தேவாலயங்களிலும், அதன் சுற்றுவட்டார தெருக்களிலும் பல நாட்களாக சடலங்கள் கிடந்தது.
இதில் சுமார் 800 பேர் கண்டிப்பாக கொல்லப்பட்டிருக்கலாம். இப்படி இறக்கம் இல்லாமல் அனைவரையும் கொடூர கொலை செய்த அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது என்று தெரிவித்தார். மேலும் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டது, அரசு சார்பு படைகளே எனவும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை சம்பவம் எனவும் அப்பகுதி பல்கலை பேராசிரியர் கெட்டு மேக் தெரிவித்துள்ளார்.