Categories
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக முதல்வர் உத்தரவு …..!!

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கோரி கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழகத்திற்கு  177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கர்நாடகா எவ்வளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டியுள்ளது.  அதன்படி ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவோ தமிழகத்துக்கு வெறும் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கியது.

Image result for காவிரி மேலாண்மை

இந்நிலையில் கடந்த 25_ஆம் தேதி டெல்லியில் உள்ள சேவா பவனில் காவேரி மேலாண்மை  ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் ஆணையத்தின் 4_ஆவது கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்துக்கு  ஜூன் , ஜூலை மாதம் வழங்கவேண்டிய  காவிரி நீரை கர்நாடகா திறக்க வேண்டும். தமிழகத்துக்குரிய காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது.

Image result for கர்நாடக முதல்வர் குமாரசாமி

இந்நிலையில் இன்று கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி , காவிரி மேலாண்மை வாரியம் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.கர்நாடகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவேரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடக மாநில அதிகாரிகள் முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கர்நாடக மாநில அரசின் ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது .

Categories

Tech |