‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல் நடிகர் புவியரசுக்கு திருமணம் நடந்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ . ஹிந்தியில் ஒளிபரப்பான ‘பாதோ பஹூ’ என்ற சீரியலின் தமிழ் ரீமேக் இது . ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னணியை கொண்ட இந்த தொடரில் அஸ்வினி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் புவியரசு கதாநாயகனாக நடித்து வருகிறார் .
இந்நிலையில் நடிகர் புவியரசுக்கு மோகனப்ரியா என்பவருடன் இன்று திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் திருமண ஜோடிகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.