Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு… அனுமதியின்றி நடந்த ஊர்வலம்… 250 பேர் மீது வழக்குபதிவு…!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற கோரி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திமுக இளைஞரணி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்துள்ளது. இந்த ஊர்வலம் திருச்சிற்றம்பலத்தில் தொடங்கி காலகம், கொன்றைக்காடு, ஆண்டவன் கோவில் வழியாக பேராவூரணியில் சென்று முடிவடைந்துள்ளது. இதில் மாவட்ட கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன், அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஊர்வலம் அனுமதியின்றி நடந்ததாக கூறி ஊர்வலத்தில் பங்கேற்ற 250 பேர் மீது திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பட்டுக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலம் பட்டுக்கோட்டையில் உள்ள பெரியார் சிலை அருகே முடிவடைந்துள்ளது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாதுரை நகர திமுக பொருளாளர் செந்தில்குமார், திமுக பேச்சாளர் மணிமுத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |