Categories
உலக செய்திகள்

திடீரென மூண்ட சண்டை…! முத்தம் கொடுத்த இளம்பெண்…. பின்னர் நடந்த கொடூர சம்பவம் …!!

ஸ்காட்லாந்தில் ஒரு ஆணுக்கும், இளம் பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் அந்த ஆணின் நாக்கை கடித்து இளம் பெண் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தில் எடின்பர்கை சேர்ந்த  ஜேம்ஸ் மெக்கன்ஸி என்ற ஆணுக்கும் 27 வயதான பெத்தனே ரியான்  என்ற பெண்ணுக்கும் ஏதோ வாக்குவாதத்தால் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையில் அந்தப்பெண்ணை அடிப்பது போல் கையை ஓங்கி உள்ளார் ஜேம்ஸ். உடனே பெத்தனே எதிர்பாராதா விதமாக ஜேம்ஸை முத்தமிட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜேம்ஸ் திகைத்து நின்று உள்ளார். அந்த சமயத்தில் உடனே ஜேம்ஸின் நாக்கை கடித்து துண்டாக எடுத்து உள்ளார் .ஜேம்ஸ்  வாய் முழுவதும் ரத்தம் வடிய நின்றுள்ளார்.

அந்நேரம் சற்றும் எதிர்பாராமல் அவர் கடித்துத் துப்பிய நாக்கை ஒரு பெரிய seagull எனும் பறவை அவர்களின் கண்முன்னே அந்த நாக்கை தூக்கி சென்று விழுங்கி உள்ளது. ஜேம்ஸ் ரத்தம் சொட்ட வாயுடன் நின்றுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .அவருடைய நாக்கு இல்லாததால் எந்த பலனும் இல்லை வாழ்க்கை முழுவதும் நாக்கின் பாதி அளவு இல்லாமல்தான் வாழ வேண்டும். பெத்தனே தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |