Categories
தேசிய செய்திகள்

மோடிதான் அப்துல் கலாமை இந்திய ஜனாதிபதி ஆக்கினார்… சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக தலைவர்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தான் அப்துல் கலாமை இந்தியாவின் ஜனாதிபதி ஆக்கினார் என பாஜக தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “பாஜக தேசபக்தி உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி கிடையாது. ஸ்லீப்பர் செல்கள் ஆக வேலை பார்த்து வருபவர் கால தான் நாங்கள் எதிர்க்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி பல சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை அளித்து வருகிறார். அவர் தான் அப்துல் கலாமை நாட்டின் குடியரசுத் தலைவராக ஆக்கினார். அப்துல் கலாமை மதத்தின் காரணமாக குடியரசு தலைவராக ஆக்கவில்லை. விஞ்ஞானியாக அவரின் அளப்பரிய பணிகளுக்காக தான் குடியரசுத் தலைவர் ஆக்கப்பட்டார்” என்று அவர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த 2022ஆம் ஆண்டு வாஜ்பாய் தான் நாட்டின் பிரதமராக இருந்தார். அப்போது குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக மோடி இருந்தார். இருந்தாலும் மோடிதான் அப்துல்கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கினார் என பாஜக தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அப்துல் கலாமை பரிந்துரைத்த போது அனைத்து கட்சிகளின் ஆதரவோடு அப்துல் கலாம் ஜனாதிபதி ஆகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |