Categories
தேசிய செய்திகள்

கட்டுக்கட்டாக ஏகே 56 துப்பாக்கிகள்… தீவிரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிப்பு… ஆயுதங்கள் பறிமுதல்..!!

காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் அதில் இருந்து ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் புதருக்கு மத்தியில் பயங்கரவாதிகள் முறைகேடாக பயன்படுத்திய மறைவிடத்தைக்  கண்டுபிடித்தனர். அங்கு ஏகே 56 ரக துப்பாக்கிகள், சீன தயாரிப்புகள் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர்.  இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அவற்றை பறிமுதல் செய்து தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.

Categories

Tech |