Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: சமாதானம் பேச அழைத்து…. முடியை இழுத்து ரோட்டில் போட்டு…. மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…!!

மனைவியை சமாதானம் செய்ய அழைத்து கணவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் வசிக்கும் மருத்துவர் கோகுல் குமார். இவர் தனியார் மெடிக்கல் காலேஜில் வேலை பார்த்து வரும் நிலையில் மதுராந்தகம் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இவருக்கு கீர்த்தனாவுடன் திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதையடுத்து கீர்த்தனா மருத்துவமனையில் வேலை செய்து வந்ததால் கொரோனா ஊரடங்கு காலத்திலும் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் கோகுல் 10 மதங்களுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் தன்னுடைய மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் நாளுக்கு நாள் அதிகமாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் தாய் வீட்டு சென்ற கீர்த்தனா கணவரை விவாகரத்து செய்யவும் சென்றுள்ளார். இதையடுத்து சமாதானம் பேசுவதாக மனைவியை அழைத்த கோகுல் அவரை காரில் ஏறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டததன்னதில் கோகுல் தன்னுடைய மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் கோபம் அடங்காமல் முடியை பிடித்து இழுத்து வந்து ரோட்டில் தள்ளிவிட்டு காரையும் ஏற்றி கொன்றுள்ளார். அப்போது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கீர்த்தனாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கோகுலை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |