Categories
மாநில செய்திகள்

Breaking: கவிழும் ஆட்சி… திணறும் முதல்வர்… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டார். தற்போது எம்எல்ஏக்கள் பதவி விலகி கொண்டிருப்பதால் பெரும்பான்மையை நிரூபிப்பதில் முதல்வர் நாராயணசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் பலம்பர் குறைந்துள்ளது. எனவே இனிமேல் முதல் அமைச்சர் நாராயணசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. அதன் காரணமாக நம்பிக்கை இழந்த முதல் அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பேரவையில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 26. இதில் காங்கிரசிற்கு திமுக, சுயச்சை என மொத்தம் 12 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில் மூன்று நியமன எம்எல்ஏ உட்பட 14 பேர் உள்ளனர். தற்போது துணை சபாநாயகர் பாலைநிலத்தில் அடுத்த கட்ட முடிவு குறித்து ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. ஆலோசனையில் எடுக்கும் முடிவை பேரவையில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |