Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சக்கரையில் எவ்வளவு ஆபத்து தெரியுமா…? தெரிஞ்சதுனா பயன்படுத்தவே மாட்டீங்க… கட்டாயம் படிங்க..!!

சக்கரை என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஒவ்வொருநாளும் தேனுடன் சிறிது சக்கரை சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

சர்க்கரை தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் நஞ்சாக மாறிவிடும். சீனி உட்கொள்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். நம் உடலில் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும் சர்க்கரை உட்கொள்ளும் போது மக்களுக்கு விரைவில் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.

பெரும்பாலும் நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் சர்க்கரையை பயன்படுத்துவதால் தான் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது தவிர சர்க்கரை மிக விரைவில் உடல் எடையை அதிகரிக்க வைக்கின்றது. உடலுக்கு ஏற்படும் அபாயம் தவிர நம் சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும்.

எனவே நாம் முடிந்தவரை குறைந்த அளவில் சர்க்கரையை உட்கொள்ளவேண்டும். தேவையான நேரத்தில் நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கொள்வது நல்லது .பெரும்பாலான மக்கள் நாட்டுச்சக்கரை உபயோகிக்கும் பழக்கத்தை கொண்டு வந்துள்ளனர். சாலையோர டீக்கடையில் நாட்டுச்சக்கரை போட்ட டீ காபி கிடைக்கின்றது. எனவே அதனை பயன்படுத்தினால் நாம் பல நோயிலிருந்து விடுபடலாம்

Categories

Tech |