Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த பிரச்சனையை எல்லாம் உங்களுக்கு இருக்கா…?”அப்ப உங்க கல்லீரல் அபாயகரமான நிலையில் உள்ளது என அர்த்தம்”..!!

கல்லீரல் பாதிக்கப் பட்டதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

கல்லீரலானது சரியாக இயங்கவில்லை என்றால் வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். உடலிலுள்ள அம்மோனியாவானது அதிகம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். சோர்வான கண்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள கண்கள் கல்லீரல் சரியாக இயங்காவிட்டால் வரக்கூடிய பிரச்சனை.

மேலும் தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுவதே இதற்கான முக்கிய அறிகுறி. செரிமான பிரச்சனை அதிகம் ஏற்படும்.  எண்ணெய்ப் பண்டங்களையும், கொழுப்புப் பொருட்களையும் சாப்பிடும் சமயம் அதிக எரிச்சலை உண்டாக்கும். கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால் தண்ணீர் சரியாக வெளியேறாமல், கல்லீரல் வீக்கம் அடையும். இந்த பாதிப்புகளை உண்டாகக்கூடிய நோய்களுக்கு உடனே மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள்.

Categories

Tech |