Categories
அரசியல்

ஓபிஎஸ் புகழாரம்… ”1இல்ல… 2இல்ல”… 11 மாங்காய் விழுந்துட்டு… கலக்கிய விஜயபாஸ்கர் …!!

நேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சி எந்த குறையும் சொல்ல முடியாது ஆட்சி. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பருவமழையின் தவறாக பொழிந்து கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் தொழில் புரட்சி,  உலகத்தில் இருக்கின்ற பணக்கார நாடுகளை எல்லாம் இங்கு அழைத்து வந்து, தொழில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி,  நாட்டினுடைய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் விவசாய புரட்சி, அனைத்து நிலைகளிலும் விவசாய பெரும்குடிமக்களுக்கு அனைத்து நிலைகளிலும் உதவிகரமாக பல்வேறு திட்டங்கள் மானியவிலையில் கொடுக்கின்றோம்.

இன்னொரு பக்கம் மாணவ செல்வங்களுக்கு பதினாறு வகையான கல்வி உப கரணங்களை தந்து படிக்க வைத்து, பட்டம் பெற வைத்து  வேலை வாய்ப்புக்கு செல்கின்ற திட்டம்.நீட்டில் வெற்றி பெற்ற அரசு தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் பல கூட்டங்களில் சொல்வாரு, போன வருஷம் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் நிட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது 6பேர் தான். இப்போது 425பேர் சேர்ந்து இருக்கிறார்கள். இதுவே ஒரு நல்ல அரசு செய்கின்ற வேலை.

ஒரு மருத்துவக்கல்லூரி வாங்குவதற்கு நாங்கள் படும் பாடு பெரும் பாடாக இருக்கும். ஆனால் 11 மருத்துவ கல்லூரிகள் பெற்றுள்ளோம். எல்லோரும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பார்கள். ஆனால் 11 மாங்காய் விழுந்த வரலாறு இதுவரைக்கும் இல்லை. அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியது மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர், அதற்க்கு உறுதுணையாக இருந்தது முதல்வர். இப்படி சாதனை மேல் சாதனையாக அரசை  கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம்.

இப்படியான அதிமுக வரலாற்றை ஸ்டாலினால் பொறுக்க முடியல. எப்படியாவது ஆட்சி பிடிக்க நினைக்கின்றார், அது முடியாது. எந்த காலத்திலும் ஸ்டாலின் ஆட்சியை, நம்மிடம் இருந்து தட்டி பறிக்க முடியாது. ஸ்டாலின் ஆட்சியை பிடிப்பதை தடுத்து நிறுத்துகின்ற சக்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களும்,  தமிழகத்தினுடைய ஏழரை கோடி மக்களும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Categories

Tech |