நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் பல்கலைக் கழகத்தை உருவாக்கி கேரள மாநிலம் சாதனை படைத்துள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக தொழில்நுட்ப கல்வியை முன்னேற்றம் செய்யும் வகையில் கேரளா மாநிலம் டிஜிட்டல் பல்கலைகழகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. தலைநகர் திருவனந்தபுரம் அடுத்துள்ள மங்கல புரத்தில் இயங்குகின்ற ஐ.ஐ .டி யை மேம்படுத்தி இந்த டிஜிட்டல் பல்கலைக்கழக உருவாக்கி உள்ளார்கள். நேற்று காணொலிக் காட்சி மூலம் இந்த டிஜிட்டல் பல்கலைக்கழக தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் முதல்-மந்திரி பினராய் விஜயன் ஆவார்.அப்பல்கலைக்கழக கல்வெட்டை பல்கலைக்கழக வேந்தரும் கவர்னருமான முகமது ஆரிப் கான் திறந்து வைத்துள்ளார்.
மாநில அரசு இந்த டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கு எடுத்த முயற்சியை பாராட்ட நிகழ்ச்சியில் கவர்னர் பேசியுள்ளார். மேலும் முதல் மந்திரி பினராய் விஜயன் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குவதற்காக மட்டுமே இந்த டிஜிட்டல் பலகலைக்கழகம் திறந்தருப்பதாக கூறினார். சமூகத்தில் டிஜிட்டல் பிரிவினை இருக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் சிறப்பை அடைவதற்கான முயற்சிகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் அறிவியல் எலக்ட்ரானிக் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேஷன் உள்ளிட்ட 5 துறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு துறையும் பட்டமேற்படிப்பு வரையிலான கல்வியை வழங்குவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று கூறினார்.