Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எவ்ளவோ முயற்சி பண்ணியும் முடியல… பட்டதாரி வாலிபரின் முட்டாள்தனம்… CCTV கேமராவால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பட்டதாரி வாலிபர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சின்னத்துறை பகுதியில் இருக்கும் ஒரு வங்கியின் ஏ.டி.எம் மையம் இயந்திரம் உடைந்து கிடைப்பதாக வங்கி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வங்கி ஊழியர்கள் அங்கு ஆய்வு செய்தபோது ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர் யாரோ பணம் கொள்ளை அடிக்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் ஏ.டி.எம் மையத்திற்கு நுழைந்து எந்திரத்தை உடைக்க முயற்சி செய்வதும், உடைக்க முடியாமல் திரும்பி செல்வதும் அதில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வங்கியின் மேலாளர் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த வாலிபரின் முகம் அடையாளம் காணப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் சின்னத்துரை கிராமத்தில் வசித்து வரும் ஆபிரகாம் என்பவரின் மகனான வினோத் என்பதும், பி.ஏ பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. எனவே செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கொள்ளை முயற்சியில் அவர் ஈடுபட்டதை வினோத் ஒப்புகொண்டார். மேலும் இச்வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |