Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல… மொத்தம் 2 கோடி மதிப்பு… சமர்பிக்கப்பட்ட போலி ஆவணம்… சிக்கிய ஆள்மாறாட்ட கும்பல்…!!

போலி ஆவணங்களை பயன்படுத்தி பத்திர பதிவு செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் நல்லேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேல பச்சைக்கொடி பகுதியில் வசிக்கும் செல்லையாவின் மனைவி துர்கா தேவி என தனது பெயரை மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் இவர் திருச்சி கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்தில் வசிக்கும் ராஜசேகர் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்குவதற்காக வந்துள்ளார். அந்த சமயம் இரண்டு கோடி மதிப்பிலான சேதுராப்பட்டியில் உள்ள நிலத்தை பதிவு செய்வதற்காக வந்திருப்பதாக கூறியதால், மனச்சநல்லூர் மேல ஸ்ரீதேவி மங்கலத்தில் வசித்து வரும் சந்திரசேகர் என்பவரின் மகன் பார்த்திபன் அவரது ஆவணங்களை தயார் செய்துள்ளார்.

இந்நிலையில் சார் பதிவாளருக்கு ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்கு முன்பு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கே.கே நகர் போலீசாருக்கு அவர் உடனடியாக தகவல் தெரிவித்து விட்டார்.  அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆறுமுகம் பாஸ்கர் என்பவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது இது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கே.கே நகர் போலீசார் பார்த்திபன், பாஸ்கர், ஆறுமுகம், ராஜசேகர், லட்சுமி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அதோடு இதில் சம்மந்தப்பட்ட தலைமறைவான ஆரோக்கியசாமி மற்றும் பெரியசாமி ஆகிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |