Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அப்போ இதே வேலைதான் நடக்குதா… வசமாக சிக்கிய நபர்… கைது செய்த காவல்துறை…!!

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூங்கில் மண்டபம் பகுதியில் சின்ன காஞ்சிபுரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். அப்போது போலீசார் விசாரிக்கும் போது அந்த நபர் வரதராஜபுரம் பகுதியில் வசிக்கும் சசிகுமார் என்பதும், அவர் கடையின் பூட்டை உடைத்து 500 ரூபாய் திருடியதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் காந்தி ரோட்டில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் கோவிலின் அலுவலக அறை பூட்டை உடைத்து 500 ரூபாய் திருடியதையும் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வாறு தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவரை கைது செய்த போலீசார் காஞ்சீபுரம் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டனர்.

 

Categories

Tech |