Categories
மாநில செய்திகள்

பாஸ்டேக் ஸ்டிக்கரே ஒட்டல…. பழனியில் இருந்த காரு ஒடிசாவுக்கு போயிருச்சா..!! பணம் வசூல்… என்ன பித்தலாட்டம்..?

பழனியை சேர்ந்த தனியார் பணியாளர் ஒருவர் ‘பாஸ்டேக் ஸ்டிக்கரை தனது வாகனத்தில் பயன்படுத்தும் முன்னதாகவே ஒடிசாவில் பயணித்தாக கட்டணம் வசூலிக்கப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தும் முறை கட்டாயம் என்று கூறப்பட்டது. ‘பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து பெரும்பாலும் தங்களது வாகனங்களில் ‘பாஸ்டேக் பயன்படுத்தி பயணித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது காரில் ஒட்டுவதற்காக கடந்த மாதம் 8ஆம் தேதி ‘பாஸ்டேக் ஸ்டிக்கரை வாங்கினார்.

ஆனால் அவர் அதை காரில் ஒட்டாமல் வீட்டில் வைத்திருந்தார். இதற்கிடையே கடந்த மாதம் 21ம் தேதி அவரது செல்போனுக்கு ஒரு செய்தி வந்தது. அவரது கார்  ஒடிசா மாநிலம் சர்க்கார் சுங்க சாவடியை கடந்ததாகவும் அதற்காக 60 ரூபாய் பிடித்தம் செய்யப் பட்டதாகவும் குறிப்பிட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பழனியில் உள்ள வங்கியில் புகார் செய்தார். ஆனால் வங்கி தரப்பில் இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதுவரையில் அவரது பணமும் திரும்பக் கிடைக்கவில்லை.

இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் சாதாரண மக்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் ‘பாஸ்டேக் ஸ்டிக்கரை பயன்படுத்தி வருகின்றனர் . ஆனால் ஸ்டிக்கரை பயன்படுத்தாமலே அதற்கு கட்டணம் வசூலிக்கப் பட்டது குறித்து குறுஞ்செய்தி வந்திருப்பது பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. எனவே முதலில் அதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறினார். பழனி சேர்ந்தவரின் காரில் ‘பாஸ்டேக் ஸ்டிகர் ஓட்டுவதற்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் பயணித்ததாக கட்டணம் வசூலிக்கப்பட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |