Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு பெண்ணே எதிரி… பிஞ்சு குழந்தையை துடிதுடிக்க கொன்ற பாட்டி… அதிர்ச்சி வாக்குமூலம்…!!!

உசிலம்பட்டி அருகே பெண் குழந்தையை துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள கேப்பாறைப்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயத்தில் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சிவ பிரியங்கா (28)என்ற மனைவி இருக்கிறார் .இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு சிவ பிரியங்காவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்து இறந்துவிட்டது.இதற்கிடையில் மீண்டும் கர்ப்பமான சிவ பிரியங்காவிற்கு கடந்த வாரம் நான்காவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.இச் சம்பவத்தன்று அந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அருகில் உள்ள உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் மிக விரைவில் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்தனர்.

அதன்பிறகு  மருத்துவர்கள் பெற்றோர்களிடம் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.மேலும் பச்சிளம் குழந்தையின் முகத்தில் ஆழமான கீறல்களும் , காயங்களும் இருந்ததை அறிந்த மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் உத்தப்பநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

.உடனே குழந்தையின் உடலை மீட்டு உடனடியாக பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்ததில் குழந்தையின் முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது. பிறந்த ஏழு நாட்களே ஆன நிலையில் இந்த குழந்தை கொலை செய்யப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்பாக போலீசார் குழந்தையின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் சம்பவம் நடந்த அன்று காலை குழந்தையை தன் தந்தை நாகம்மாள் இடம் கொடுத்து விட்டு வயல் வேலைக்குச் சென்றேன் என்று சின்னசாமி கூறினார். இதை அறிந்த போலீசார் நாகம் மாளை பிடித்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் நாகம்மாள் பெண் குழந்தையை கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். இதனால் போலீசார் நாகம்மாளை  உடனடியாக கைது செய்தனர். விவசாயக் கூலித் தொழிலாளியான சின்னசாமிக்கு சில ஆண்டுகளாக சரியாக வேலை இல்லாததால் இன்னும் வறுமையில் வாடிக் கொண்டிருந்தது.

ஏற்கனவே பிறந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கும் உடல் ரீதியாக பாதிப்பு இருக்கின்றன என்று மருத்துவர்கள் கூறினர். அதனால் இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் சின்னசாமிக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தையும் சில மாதங்களிலேயே இருந்ததால் அவரது குடும்பம் ஆழ்ந்தசோகத்தில் மூழ்கின. இதற்கிடையில் சிவ ப்ரியங்கா மீண்டும் கர்ப்பமானார்.அப்போது சின்னசாமி மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவரும் ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் கொண்டிருந்தன

.ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் சின்னசாமி மற்றும் அவரது தாயார் நாகம்மாள் ஆகியோர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதனை வளர்க்க குடும்ப சூழ்நிலை இல்லை என சின்னசாமி வருந்தினார்

மேலும் ஏதேனும் காப்பகத்திற்கு அழித்துவிடலாம் என சின்னசாமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.ஆனால் இதில் நானாக மாலுக்கு விருப்பம் இல்லை அதனால் அவர் தனது பேத்தியை கொல்ல முடிவு செய்தார்.கள்ளிப் பால் கொடுத்தால் பிரேத பரிசோதனையில் தெரிந்துவிடும் என கருதிய நாகம்மாள் அவர் இரக்கம் அற்ற நிலையில் தலையணையால் மூச்சை நிறுத்தி பச்சிளங் குழந்தையை கொலை செய்யலாம் என திட்டமிட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நாகம்மாள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில்எனது மகனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்து இருந்தேன் ஆனால் மீண்டும் பெண் குழந்தை பிறந்தால் ஏமாற்றம் அடைந்ததாக கூறினார்.எனவே குடும்பம் வறுமையில் வாடியது அக்குழந்தையை தலையணையால் அமுக்கி கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார்.வெளியில் தெரியாது என நினைத்தேன் ஆனால் மருத்துவர்கள் இதை கண்டுபிடித்து விட்டார்கள் என கூறினார். கைதான நாகம்மாள் சார்பில் ஒப்படைக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது போல் தானும் ஒரு பெண் என்பதை மறந்து நாளும் வாழ்த்தாது பேத்தியை கொலை செய்திருப்பது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |