இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்பதில் தமிழகம் 2வது இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வு இந்தியா முழுவதிலும் நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 12.8% பேர் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தெரியவந்துள்ளது. இந்திய அளவில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் கிராமப்புறங்களில் 40 சதவீதம் பேர் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். கிராமப்புறங்கள் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் எட்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் அரசு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும், சிலர் இதுபோன்ற திறந்தவெளிகளில் மலம் கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் பல நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.