Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்…. நல்லா தூங்குங்க… இல்லனா உயிருக்கே ஆபத்து?… கொஞ்சம் படிச்சி பாருங்க…!!!

நாம் சரியாக தூங்கவில்லை என்றால் உடலில் எவ்வாறான ஆபத்துக்கள் ஏற்படும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் அன்றாட வாழ்வில் உணவு மற்றும் தூக்கம் என்பது மிகவும் முக்கியம். அவ்வாறு இவை இரண்டும் சரியாக இல்லாவிட்டால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படும். தினசரி போதுமான நேரம் தூங்கவில்லை என்றால் உடலில் பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு தினமும் சரியாக தூங்கவில்லை என்றால் மூளை மந்தமாகும். தலைவலி எரிச்சல் ஏற்படும். கழிவுகள் சேரும். செயல்பாடு மந்தமாகும். பதற்றம் அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்கும். ஹார்மோன் சமநிலை பாதிப்பதால் உடல் பருமன் கூடும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மனதின் அமைதி கெடும். சமநிலை பாதிக்கும்.

இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். உடல் உறுப்புகள் ஒருங்கிணைப்பு பாதிப்பதாக விபத்துகளில் சிக்க வாய்ப்பு அதிகரிக்கும். அதனால் தினசரி 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். அறுபத்தி நான்கு வயதிற்கு மேல் உள்ளவர்கள் 7 முதல் 9 மணி நேரமும், குழந்தைகள் 9 முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும். தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன்பாக காபி குடிக்கக் வேண்டாம். படுக்கை அறையில் டிவி மற்றும் உணவு இருக்கக் கூடாது.

Categories

Tech |