Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தில் ம.நீ.ம சார்பில் கமல் பங்கேற்கிறார்…!!

முதலவர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை  மத்திய அரசு நிறைவேற்றியது. தமிழகத்தில் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் இந்த இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு முதலவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் , தலைமை செயலகத்தில் இன்று மாலை  ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகின்றது.

தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாமா ? அல்லது வேண்டாமா என்று அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என்று முடிவாகியுள்ளது.இதையடுத்து இன்று மாலை நடைபெறும் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

Categories

Tech |