நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்து நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிய வகை உருமாறிய கொரோனா பரவி இருக்கிறது. இந்த உருமாறிய கொரோனாவால் தான் வேகமாக பரவி வருவதாக நம்பப்படுகிறது. மேலும் மும்பை ஆகிய பகுதிகளிலும் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களாக எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. கடைசியாக செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று ஒரே நாளில் இந்தியா முழுவதுமாக 97,894 என்பதுதான் இந்தியா பெற்ற உச்சம். அதன்பின் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களாகவே கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப் மற்றும் ஆகிய நான்கு மாநிலங்களில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே கொரோனாவின் இரண்டாம் அலையின் தொடக்க்கத்தில் நாம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.