Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 22 முதல்…. 6 முதல் 8 ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் கர்நாடகாவில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் 22 ம்  தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய சில முக்கிய வழிமுறைகளை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனை பற்றி பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில் , 6 ம் வகுப்பு மாணவர்கள் தங்களது உணவை வீட்டிலிருந்து கொண்டு வரலாம் குடிநீரும் எடுத்து வர வேண்டும்.

மேலும் குழந்தைகள் சாப்பிடும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயம்  முக கவசம் அணிய வேண்டும் என்றும் வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 10 மணி முதல் 4.30 மணி வரையிலும் சனிக்கிழமைகளில் காலை 10.30 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையிலும் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும் என்று உறுதியாகக் கூறினார்.

பெங்களூர் மற்றும் கேரள மாநில எல்லை பகுதியில் உள்ள  பள்ளிகளுக்கு 8 ம் வகுப்பு மட்டும் தொடங்கப்படுவதாகவும் மற்றும் 6 ம் 7ம்  வகுப்பு மாணவர்களுக்கு  வகுப்புகள் மட்டும் வழக்கம்போல் வாரத்தில் மூன்று நாட்கள் நடத்தப்படுவதாகவும் மாணவர்கள் முதல் நாள் பள்ளிக்கு வரும்போது பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும் என்றும் பள்ளிகளில் சில மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு சோதனை நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளி கல்லூரி விடுதிகளும் திறக்கப்படுவது தெரிவித்துள்ளனர்.

அதனை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலை பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். மாணவர்கள் விடுதியில் வருகையை பதிவு செய்து கொள்வதற்காக மார்ச் 30ஆம் தேதி வரை தேதி நீட்டிக்கபடுவதாக உள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |