Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! சேமிப்பு தேவை..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு அமைதியான மற்றும் சௌகரியமான நாளாகவே இருக்கும்.

திருப்தியான எண்ணங்களும் சாதித்த உணர்வும் உங்களிடம் காணப்படும். இன்று உங்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் துணையுடன் அன்பு வயப்பட்ட நிலையில் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பயனுள்ள சேமிப்பிற்கான நாட்டத்தை கொண்டிருப்பீர்கள். இது உங்களுக்கு திருப்தி அளிக்கும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருந்து கொள்வது நல்லது.
இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2. அதிர்ஷ்டமான நிறம் காவி நிறம்.

Categories

Tech |