ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக 3 ஜி.பி. டேட்டா (3 G.B Data) வழங்கும் சலுகையை அறிவித்துள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூபாய். 148 விலையில் புதியதொரு பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு 3 G.B Data, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் ரூ. 145 விலையில் சலுகையை வழங்குகிறது.இந்த சலுகையில் பயனாளர்களுக்கு ரூ. 145 டாக்டைம், 1 G.B Data உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஸ்பெஷல் ரீசார்ஜ் S.T.V காம்போ பிரிவில் கிடைக்கும் ரூ. 148 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 S.M.S. வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் T.V . APP மற்றும் விண்க் மியூசிக் சேவையை இயக்குவதற்கான வசதியும் வழங்கப்படுகிறது. தற்போது இச்சலுகை ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடாகா போன்ற வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் இச்சலுகை மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ரூ. 148 ஏர்டெல் பிரீபெயிட் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு மொத்தம் 3 G.B Data வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், உள்ளூர், வெளியூர் அழைப்புகளுடன், தினமும் 100 S.M.S. வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் T.V . APP மூலம் 350-க்கும் அதிக லைவ் சேனல்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் விண்க் மியூசிக் சேவையை பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.
முன்னதாக ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 1699 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்து தினமும் 1.4 G.B Data வழங்குவதாக அறிவித்தது. ஏற்கனவே இச்சலுகையில் 1 G.B Data மட்டும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையிலும் ஏர்டெல் T.V . APP மூலம் 350-க்கும் அதிக லைவ் சேனல்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழும் வசதி மற்றும் விண்க் மியூசிக் சேவையை பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.