சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்காத நிலையில் ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை அணிக்காக தேர்வாகி இருப்பது விளையாட்டிலும் வாரிசு அரசியல் இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
14ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கடைசி நபராக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனனுக்கு எலத்தொகையாக இருபது லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. வேறு எந்த அணியும் அவரை வாங்க முன்வராத நிலையில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு ஏலத்தில் எடுத்தது.
இதனிடையே முதல் தர மற்றும் டிடுவண்டி போட்டிகளில் பெரிய அளவில் அர்ஜுன் சாதிக்காத நிலையில் ஐ.பி.எல்லில் தேர்வானது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது.
இதன் மூலம் விளையாட்டிலும் வாரிசு அரசியல் இருப்பதும் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் , அர்ஜுனை விட பல திறமையான வீரர்கள் இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் சச்சின் மகன் என்பதற்காக வாய்ப்பு அளிக்கப்பட்டது தவறு என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.