இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், தென்மாநிலங்களில் N40K என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் வெகு நாட்களுக்கு பிறகு தினசரி கொரோணா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 13,000த்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09, 63,394ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தென்மாநிலங்களில் N40K என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானாவில் அமைந்துள்ள செல்லலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் சார்பில் கொரோணா வைரஸின் பல்வேறு வகைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பக்கூடிய இருவகை கொரோனா வைரஸ்கள், இந்தியாவில் பரவி வருவதாகவும், மேலும் N40K என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தென்மாநிலங்களில் அதிக அளவில் பரவி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பரவல் குறித்து முறையாக அறிந்து கொண்டால் அடுத்த பேரிடர் நிகழாமல் தடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர் .