திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூபாய் 300 டிக்கெட்க்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மார்ச் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் 20-ந்தேதி காலை 9 மணியளவில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியிடப் படுகிறது. அதேபோல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலை திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி ஓய்வெடுக்க 20ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காலியாக உள்ள அறைகளின் விவரம் ஆன்லைனில் வெளிப்படும்.
எனவே அறைகள் தேவைப்படும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாட்களில் திருமலை திருப்பதிக்கு வந்து தங்களது முன்பதிவு செய்த அறைகளில் தங்கி சாமி தரிசனம் பெற்றுச் செல்லலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.