Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… வன ஊழியருக்கு நேர்ந்த சோகம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் வன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுச்சூழல் வனச்சரகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது துறை சார்ந்த தேர்வு எழுதிவிட்டு ஈரோட்டில் உள்ள கோபியில் இருந்து டி.என் பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் பவானி ஆற்று பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசு பேருந்தும், இவரது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விட்டன.

இதில் தூக்கி வீசப்பட்ட செல்வம் படுகாயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பங்களாபுதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |