கொக்கைன் எனப்படும் போதைப் பொருளை காரில் கொண்டு சென்ற விவகாரத்தில் பாஜக பெண் நிர்வாகி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக பாமிலா கௌஸ்வாமி என்ற பெண் பதவி வகித்து வருகிறார். இவர் பாஜக இளைஞரணி சேர்ந்த பிராபிக் குமார் தேவ் என்பவருடன் காரில் சென்று கொண்டிருந்த பொழுது நியூ அலிப்பூர் பகுதியில் போலீசார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சில லட்சங்கள் மதிப்புள்ள கொக்கைணை அவர் பர்ஸிலும், கார் சீட்டிற்கு கீழே இருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து பாமிலா கௌஸ்வாமியையும், பிராபிக் குமார் தேவ்வையும் கைது செய்தனர். கைது செய்த பொழுது பாமிலா கோஸ்வாமி கூச்சலிட்டபடி போலீஸ் வேனில் ஏறியதால் கூறப்படுகிறது. அவருக்கு போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நாட்களாக பின் தொடர்ந்த பிறகு அவரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தேர்தல் வர இருக்கும் நேரத்தில் இந்த விவகாரம் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.