மேற்குவங்கத்தில் அதிகமான தெருநாய்கள் மர்மமான முறையில் இறந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 நாட்களில் 200 க்கும் அதிகமான தெரு நாய்கள் மேற்கு வங்கத்தில் பாங்குறா மாவட்டத்தில் பிஷ்ணுபூர் என்ற பகுதியில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதலில் விலங்குகளிடமிருந்து தான் பரவியது என்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது நாய்களிடம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் அந்த இறந்த நாய்களின் ரத்த மாதிரிகளை சேகரிக்கப்பட்டு சோதனைக்காக கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த நாய்களை புதைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி கூறும்போது நாய்களிடம் ஏதாவது பொதுவான வைரஸ் மூலமாக இது பரவியிருக்கலாம். அனால் இந்த தொற்று மற்ற விலங்குகளுக்கும் , மனிதர்களுக்கும் பரவுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.