சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொண்டபுரம் பகுதியில் டவுன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் 550 பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குட்கா விற்பனை செய்த குற்றத்திற்காக சி.எஸ்.ஐ சர்ச் தெருவில் வசித்துவரும் கண்ணன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து 25 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.