Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கும் லஞ்ச வாங்கவீங்களா… புகார் கொடுத்த கர்ப்பிணி பெண்… அதிரடி நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்பு துறை…!!

மகப்பேறு நிதி உதவி பெறுவதற்காக சென்ற கர்ப்பிணிப் பெண்ணிடம் லஞ்சம் கேட்ட சுகாதாரத் துறை செவிலியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட மதுரையில் வசித்து வருபவர் கிராம சுகாதார செவிலியர் செவிலியரான பழனியம்மாள். இவர் தரகம்பட்டியில் இருக்கும் துணை சுகாதார நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பழனியம்மாளிடம் மகப்பேறு நிதி உதவி பெறுவதற்காக அந்தபகுதியில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்ணான இளமதி விண்ணப்பித்துள்ளார். அதற்கு சிந்தாமணி அந்தப் பெண்ணிடம் நிதி உதவி வேண்டுமானால் ரூபாய் 2000 தரவேண்டும் என்று இளமதியிடம் கூறியுள்ளார்.

ஆனால் இளமதி லஞ்சம் கொடுக்க விரும்பாததால் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய நோட்டுகளை இளமதியிடம் கொடுத்து பழனியம்மாளிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி இளமதியும் காவல்துறையினர் கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டுகளை பழனியம்மாளிடம் கொடுக்கும் போது மறைந்திருந்து கவனித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |