Categories
தேசிய செய்திகள்

Sad: என் சாவுக்கு நீங்க வரணும்… பிரபல நடிகரின் ரசிகரால் அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலத்தில் ரசிகர் ஒருவர் பிரபல நடிகருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மாண்டி என்ற பகுதியில் ராமகிருஷ்ணா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் நடிகர் யஷ்ஷின் தீவிர ரசிகர். இந்நிலையில் ராமகிருஷ்ணா கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், “நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டேன். நான் யஷ் மற்றும் சித்தராமையாவின் தீவிர ரசிகன்.

அவர்கள் இருவரும் என் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்பது என் கடைசி ஆசை” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் அவரின் இழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |