கடுமையான பனிப்பொழிவால் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்திற்கு 11 வயது சிறுவன் கிரிஸ்டியன் தனது தாயாருடன் வசிப்பதற்காக 2019 ஆம் ஆண்டில் மத்திய அமெரிக்க நாடான ஹோன்டுராஸிலிறுந்து வந்துள்ளார்.அங்கு கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.இதுவரை பனிப் பொழிவை பார்த்திராத சிறுவன் கிறிஸ்டியன் முதன்முதலில் பனிப் பொழிவை பார்த்த குதூகலத்தில் அதை ரசிக்கத் தொடங்கிணான் ஆனால் கடுமையான பனிப் பொழிவை அவன் உடல் நிலை தாங்காததால் சிறுவன் உறைந்து போய் இருந்தான். மொபைல் குடியிருப்பில் அச்சிறுவன் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்ட அவரின் தாயார் மற்றும் வளர்ப்பு தந்தை கிறிஸ்டியனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
டெக்ஸாஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவால் சுமார் 4.4 மில்லியன் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் அதோடு மின்சாரம் இல்லாததாலும் அவர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.டெக்ஸாஸ் மாகாணத்தில் மட்டும் இச்சிறுவன் உட்பட 30 பேர் மரணமடைந்துள்ளனர்.டெக்ஸாஸ் மாகாணத்தில் 200,000 மக்கள் மின்சாரம் இல்லாமலும் 10 பில்லியன் மக்கள் குடிநீர் இல்லாமலும் கஷ்டப்பட்ட வருகின்றனர்.