அவசர கால கடன் திட்டத்தின் மூலமாக சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் அதிக அளவு கடன் வழங்கியதாக ஆய்வு ஒன்று கூறப்படுகிறது.
இந்திய பொருளாதாரத்தின் மூலம் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாக சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இவைகளின் கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது . அதை மீட்டெடுக்கும் வகையில் அரசு தரப்பில் இருந்து அவசர கால கடன் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு தனிநபர் முதலாளிகள், கூட்டு நிறுவனங்கள் , பதிவு செய்த நிறுவனங்கள், அறக்கட்டளை, அளவான கடன் கொண்ட கூட்டு நிறுவனங்கள், முத்ரா திட்டத்தின் கீழ் இணைந்திருப்பவர்கள் போன்றோருக்கு சிறப்பு கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக அளவு கடன் வழங்கப்பட்டுள்ளதாக டிரான்ஸ் யூனியன் சிபில் அறிக்கை கூறுகிறது. இதுகுறித்து 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய வங்கிகள் வணிக ரீதியாக மொத்தம் 70 1.3 லட்சம் கோடி கடன் வழங்கியதாகவும், அதில் நிறுவனங்கள் துறைக்கு மட்டும் 19 கோடி வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டைவிட 5.7% அதிகமாகும். ஒட்டுமொத்தமாக 2.7 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறு குறு நடுத்தர துறையின் கீழ் 10 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான பிரிவில் 9 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 50 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான கடன் பிரிவில் 8 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. அவசர கால கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்த சிறப்பு பொருளாதார சலுகைகள் மூலம் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக டிரான்ஸ் யூனியன் சிபில் ஆய்வு கூறுகிறது.